அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்வாய் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி ஊராட்சி பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் எதிராக ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் சாலையில் தனிநபர் ஒருவரின் ஆரோக்கிய பால் பத்து வருடங்களுக்கு மேலாக 15 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் நிலங்கள் மழை காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் இருந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் 15 ஏக்கருக்கும் மேலான விளை நிலங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் நின்றுள்ளது.
இதனால் வயலில் விளைந்த பயிர்கள் மழை நீரில் நனைந்து சேதம் அடைந்ததால் ஆக்கிரமிப்பு செய்த தனி நாபரை விவசாயிகள் தட்டிக் கேட்டுள்ளனர். இதனையடுத்து இதற்குத் தீர்வு கிடைக்காத காரணத்தினால் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள், கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் மற்றும் துணைத்தலைவர் அரவிந்தன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் தனிநபரின் இடத்தில் இருந்து மூன்று அடி அகலத்திற்கு பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் எடுக்கப்பட்டு மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவற்றால் பொன்னேரி சுற்றுப் பகுதியில் இருக்கும் 15 ஏக்கர் பரப்பளவில் நிலத்தில் தேங்கி நிற்கும் மழை நீர் அகற்றப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கும் இடத்தை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்வாய் அமைத்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.