ஆடு திருடிய குற்றத்திற்காக வாலிபரை என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கமலநத்தம் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் பழனியின் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டை அதே கிராமத்தில் வசித்து வரும் செல்வம் என்பவர் திருடிச் சென்றுள்ளார்.
இதுதொடர்பாக பழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், செல்வத்தை கைது செய்துள்ளனர். மேலும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஆட்டை மீட்டு காவல்துறையினர் பழனியிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர்.