Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காணாமல் போன புதுமாப்பிள்ளை… அதிர்ச்சியடைந்த பெற்றோர்… தென்காசியில் நடந்த சோகம்…!!

புது மாப்பிள்ளை திடீரென கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கூலி தொழிலாளியான இசக்கிராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இசக்கிராஜூக்கும் பாவூர்சத்திரம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மண பெண்ணின் வீட்டில் இசக்கி ராஜூக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை  தீவிரமாக செய்து கொண்டிருந்தனர்.

இதனையடுத்து புது மாப்பிள்ளையான இசக்கி ராஜா யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென திருமண வீட்டிலிருந்து காணாமல் போனார். இதனை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் இசக்கிராஜாவை தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில் கிழகுத்தபாஞ்சான் பகுதியில் இருக்கின்ற கிணற்றின் அருகில் இசக்கிராஜாவின் கைபேசி மற்றும் காலணிகள் இருப்பதைக் கண்டு சிலர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இசக்கிராஜா கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து இருப்பாரோ என்ற அச்சத்தில் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி இசக்கி ராஜாவை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு இசக்கி ராஜாவின் உடலை சடலமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசக்கிராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |