Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி … தொழிலாளியின் மூர்க்கத்தனமான செயல்… நீதிபதியின் தீர்ப்பு…!!

சிறுமியை கடத்திய குற்றத்திற்காக  தொழிலாளிக்கு நீதிபதி 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

சேலம் மாவட்டத்திலுள்ள சின்னநடுப்பட்டி பகுதியில் தங்கவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கட்டிட தொழிலாளியான ராமன் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கும் அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ராமன் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை கடத்திச் சென்ற ராமனை வலைவீசி தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் சிறுமி மற்றும் ராமனை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவரை ராமன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் நீதிபதி முருகானந்தம் என்பவர் வழக்கை விசாரித்து  சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ராமனுக்கு 40,000 ரூபாய் அபராதம் மற்றும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |