காணாமல்போன இருவரை போலீசார் காட்டுப்பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் வடக்கில் மகேஷ் பேட்ரிக் மற்றும் ஷாஹுன் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து அவர்களின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு வாரமாக போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இறுதியாக இருவரும் ஆள் நடமாட்டமில்லாத காட்டுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தெரிவிக்கப்பட்டதில், அவர்கள் காரில் சென்று கொண்டிருக்கும் போது வண்டியானது பழுதாகி நின்றதால் வேறு வழியின்றி நடக்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும் இருவரும் சாலையை நோக்கி வருவதற்கு பதிலாக மாறி வெவ்வேறு பாதையில் பிரிந்து சென்றுள்ளனர். இதுமட்டுமின்றி இருவரும் தண்ணீர் தேடி பல கிலோமீட்டர் அலைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இவர்கள் இருவரையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.