மலையில் இறந்த கிடந்த தந்தை மற்றும் மகனை போலீசார் கண்டுபிடித்து சடலமாக மீட்டெடுத்துள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த Phoebe Arnold என்ற பெண் தனது மூன்று வயது மகனையும் முன்னாள் கணவரையும் கடந்த சில நாட்களாக காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில் ‘எனது முன்னாள் கணவரான Clemens Weisshaar சில மாதங்களாக எங்களுக்கு பிறந்த மகனான Tassoவை பார்க்கவில்லை. இதனால் கடந்த அக்டோபர் மாத இறுதியில் என்னிடமிருந்து Tassoவை அழைத்துச் சென்றார்.
மேலும் சிறிது நேரம் கழித்து Tassoவை நவம்பர் 1 ஆம் தேதி திரும்பி வந்து ஒப்படைத்தவிடுவேன் என்றார். ஆனால் அவர்கள் இருவரும் இன்னும் வரவில்லை. மேலும் Clemensசை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் லிஸ்பனுக்கு 80 மைல் தூரத்தில் உள்ள சான்டா மார்கரிடா டா செர்ராவிற்கு பக்கத்தில் உள்ள மலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வேட்டைக்காரர்களால் காணாமல் போன இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதிலும் 3 வயது குழந்தையான Tasso காருடன் சேர்த்து எரித்துக் கொல்லப்பட்டிருந்தான். இதனை அடுத்து Clemens துப்பாக்கியால் சுடப்பட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இது ஒரு கொலை மற்றும் தற்கொலையாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் இருவரும் இறந்து எவ்வளவு மணி நேரம் ஆனது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பரிசோதனை முடிவில் சரியான நேரம் மற்றும் காரணத்தை கண்டுபிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பிரித்தானியாவைச் சேர்ந்த Phoebe Arnoldடும் ஜெர்மனியைச் சேர்ந்த Clemens Weisshaarரும் கடந்த 2016 ஆம் ஆண்டு லண்டனில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஆனால் எங்கு, எவ்வாறு திருமணம் செய்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை. இருப்பினும் Tasso இவர்களுக்கு பிறந்த குழந்தை தான் என்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த ஜூலை மாதம் பிரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் Tassoவை அழைத்துக் கொண்டு Phoebe Arnold லிஸ்பனுக்கு குடிபெயர்ந்துள்ளார். குறிப்பாக லண்டனில் படித்த Clemens 2002 ஆம் ஆண்டு முனிச் மற்றும் ஸ்டாக்ஹோமில் தனது வணிக கூட்டாளியுடன் இணைந்து Kram/Weisshaar நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இவர் ஜெர்மனியில் பிரபலமான டிசைனராக இருக்கிறார்.