சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சு திரிபாதி (38) நேற்று (டிச.14) சக்ரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது காரை முகமூடி அணிந்துவந்த சிலர் சுற்றிவளைத்தனர். அதன்பின் அவர்கள் கார் ஓட்டிவந்த சஞ்சு திரிபாதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் சஞ்சு திரிபாதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கிடந்த 7 தோட்டா உறைகளை கைப்பற்றியுள்ளனர். மேலும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கொலை நிலத்தகராறுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று சந்தேகிக்கபடுகிறது. அதே சமயம் சில நாட்களுக்கு முன் நிலத்தகராறு தொடர்பாக இறந்த சஞ்சு திரிபாதியின் சகோதரர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.