Categories
உலக செய்திகள்

தீவிரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதல்…. ஒரு குழந்தை பலி…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள்….!!

காபூலை இலக்காக வைத்து தீவிரவாதிகள் விமான வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாட்டு படைகளும் தங்கள் சொந்த நாட்டு மக்களை மீட்டு விமானங்கள் மூலம் வெளியேற்றி வந்துள்ளனர். அந்த வகையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் சொந்த நாட்டு மக்களை மட்டும் இல்லாமல் ஆப்கனிஸ்தர்களையும் வெளியேற்றும் இறுதி கட்டப் பணி காபூலில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் திங்கட்கிழமை அதிகாலையில் காபூலில் உள்ள விமான நிலையத்தை இலக்காக வைத்து தீவிரவாதிகள் 5  விமான வெடிகுண்டுகளை வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு படையினர் சி-ரேம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி அந்த தாக்குதலை முறியடித்துள்ளனர். இருப்பினும் எல்லா ராக்கெட்டுகளும் முறியடிக்கப்பட்டதா என்பது சரியாக தெரியவில்லை. இதனையடுத்து காபூலில் உள்ள Khair Khana பகுதியிலிருந்து விமான நிலையத்தில் தாக்குதல் நடத்துவதற்காக தற்கொலை படை தீவிரவாதிகள் வாகனத்திலிருந்து விமானத்தை நோக்கி ராக்கெட் வெடிகுண்டை வீசியுள்ளனர். இந்த வெடிகுண்டுகள் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் வெடித்து சிதறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தானில் மக்களை வெளியேற்றும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஒரு குழந்தை தாக்குதலில் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தற்போது வரை இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

Categories

Tech |