கொரோனா தடுப்பூசி தயாரிப்பிற்கான காப்புரிமையை மற்ற நாடுகளுக்கு வழங்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசியின் உற்பத்திக்கான காப்புரிமையை பிற நாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று எய்ட்ஸ் சுகாதார அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது. ஏனெனில் உலகில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் சுமார் 76% அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே செல்வதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த வார இறுதியில் இத்தாலியில் நடக்கவுள்ள ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியாக மெக்சிகோவின் பாரம்பரிய உடைகளை அணிந்து எய்ட்ஸ் சுகாதார அறக்கட்டளை அமைப்பினர் நடனம் ஆடியுள்ளனர். குறிப்பாக மெக்சிகோ நாட்டில் தான் அதிக அளவு கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது என்று கூறப்படுகிறது.