Categories
உலக செய்திகள்

காபூலில் பரபரப்பு…. ஐ.எஸ் அமைப்பின் வெடிகுண்டு தாக்குதல்…. உதவி கேட்டு கெஞ்சிய பிரபல நாட்டு சிறுவர்கள்….!!

ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ் அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 60 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

அதில் 13 அமெரிக்க பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்  தலீபான்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு பிரித்தானியா சிறுவர்கள் தங்களுடைய கடவுச்சீட்டுடன் உதவி கேட்டு கெஞ்சியுள்ளனர். அதன்பின் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான சுல்தான் ஜாரி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி தங்களது நாடான பிரித்தானியாவிற்கு செல்வதே தனது ஒரே குறிக்கோள் என கூறியுள்ளார். இதனையடுத்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகள் தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என முன்னரே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |