மூத்த குழந்தையாக நேரு அலகாபாத்தில் வளர்ந்து வந்தார். ஜவஹர்லால் நேரு தன் ஆரம்பக்கல்வியை வீட்டிலேயே பெற்றார். இங்கிலாந்தில், ஜவஹர்லால் ஜோ நேரு என அழைக்கப்பட்டார். 23 வயதில், அவர் கேம்பிரிட்ஜில் பட்டம் பெற்றார். அத்துடன் படிக்கும் போது சட்டம் பயின்றார். குழந்தைகள் மீது அதிகமான பிரியமுடைய நேரு பிரதமராக இருந்தபோது ஒரு தடவை மதுரைக்கு வந்தார். அப்போது அதிகாரிகள் உடன் நேரு காரில் சென்று கொண்டிருந்த வேளையில், ஒரு வியாபாரி பலூன் விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தார்.
உடனடியாக காரை நிறுத்த சொல்லி நிறைய பலூன்களை வாங்கி, அங்கே இருந்த குழந்தைகளுக்குக் கொடுத்தார். மேலும் நேரு குழந்தைகளோடு சேர்ந்து விளையாட ஆரம்பித்து விட்டார். அதாவது பலூன்களை எடுத்து ஊதி, குழந்தையாகவே மாறி விட்டார். நேரு பிரதமர் ஆக இருக்கும்போது கூட தனது ரூமில் ஏ.சி வசதியினைப் பயன்படுத்தியதில்லை. எனினும் அவரது உதவியாளர்கள் நேருவின் அறையில் ஏ.சி. பொருத்த ஏற்பாடு செய்தனர்.
அதனைப் பார்த்ததும் நேரு மிகவும் கோவமடைந்தார். “நமது நாட்டில் பலர் ஒழுகும் கூரை வீட்டில் வாழ்கின்றனர். இந்நிலைமையில் எனக்கு இதுபோன்ற ஆடம்பரங்கள் தேவையில்லை” என நேரு கூறிவிட்டார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி உலக அமைதிக்காகவும் ஜவஹர்லால் நேரு பாடுபட்டார். எல்லைப் பிரச்னைகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை பேச்சுவார்த்தை வாயிலாக கலந்து பேசி முடிவெடுக்கலாம் என ஐ.நா சபையின் சட்டப்பிரிவுக்கு நேரு காரணமாக இருந்தார். நேரு மே-27, 1964 அன்று டெல்லியில் மாரடைப்பு காரணமாக இறந்தார். மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்துக்கு அருகே நேருவின் நினைவுச் சின்னம் இருக்கிறது.