Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவன்தான் இப்படி பண்ணிருப்பான்…. கடத்தப்பட்ட இளம்பெண்…. தந்தையின் பரபரப்பு புகார்….!!

காரில் இளம்பெண்ணை வாலிபர்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கவி என்ற மகள் உள்ளார். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சங்கவி திரும்பி வந்திருக்கிறார். இந்நிலையில் சங்கவியின் தந்தை அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார். இதனையடுத்து தனது வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்த சங்கவியை காரில் வந்த சிலபேர் கடத்தி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குமார் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் எனது மகள் சங்கவி வேலை செய்யும் தனியார் நிறுவனத்தில் ஜோலார்பேட்டை பகுதியில் வசிக்கும் பாபு என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் எனது மகளை பாபுவின் நண்பர்கள் காரில் கடத்தி சென்றுள்ளனர். எனவே எனது மகளை அவர்களிடமிருந்து மீட்டு தர வேண்டும் என காவல்துறையினரிடம் குமார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |