Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தை தவற விட்ட மாணவி…. காரில் வைத்து மெக்கானிக்கின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி வசித்து வருகின்றார். இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 பயின்று வருகிறார். இந்த மாணவி பள்ளிக்கு பஸ்சில் சென்று வந்தார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல் செல்லும் பேருந்தை தவற விட்டு விட்டார். இதனால் அவரது பெற்றோர் மாணவியை அவர்களது உறவுக்காரரான தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்த கார் மெக்கானிக் அக்பர் அலி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு செல்ல அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அக்பர் அலி தனது மோட்டார் சைக்கிளில் மாணவியை அழைத்து கொண்டு தஞ்சை நோக்கி வந்துள்ளார். அப்போது அக்பர் அலி ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பெட்ரோல் தீர்ந்து விட்டதாக மாணவியிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின் மாணவியை காரில் ஏற்றிக் கொண்டு அக்பர் அலி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் தஞ்சை புறநகர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் காரில் வைத்து மாணவிக்கு, அக்பர் அலி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அக்பர் அலி, மாணவியை மிரட்டி 7 மணி நேரம் காரில் வைத்துள்ளார். இந்நிலையில் மாலை வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவங்களை அவரது உறவினர்களிடம் அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் உறவினர்கள் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா உத்தரவின்படி, அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அக்பர் அலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |