Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காற்றின் வேகத்தால் மூடிய கதவு… இடுக்கில் சிக்கி படுகாயமடைந்த மூவர்… அதிர்ச்சியில் கோவில் பக்தர்கள்…!!

சென்னையில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் கதவில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த ஏகாம்பரநாதர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இருக்கும் ராஜகோபுர தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்துவிட்டனர். இந்நிலையில் ராஜகோபுரத்தில் உள்ள கதவை திறப்பதற்கு அந்த கோவிலில் வேலை செய்யும் மணி மற்றும் சிலர் இணைந்து முயற்சி செய்து உள்ளனர். அப்போது ராஜகோபுர கதவு திறக்கும் இடத்தில் ஏராளமான பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து  ஒரு பக்க கதவை திறந்து விட்டு மறுபக்க கதவை திறக்க முயற்சி செய்த போது காற்று பலமாக வீசியதால் திறக்கப்பட்ட கதவானது சட்டென மூடிக்கொண்டது.

இதனால் அந்த கதவின் அருகில் நின்று கொண்டு இருந்த பக்தர்களான லட்சுமி ,மணி மற்றும் தியாகராஜன் போன்றோர் கதவின் இடுக்கில் சிக்கி கொண்டு படுகாயமடைந்தனர். அதன்பிறகு படுகாயம் அடைந்த அந்த மூன்று பேரையும் அங்கிருந்த பக்தர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகத்தினரிடம்  விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |