Categories
உலக செய்திகள்

காற்று மாசு… அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… நேபாள அரசு அதிரடி உத்தரவு…!!!

நேபாளத்தில் காட்டுத் தீ பரவியதால் காற்று மாசுபாடு அடைந்துள்ளதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையே உள்ள  இமயமலைப் பகுதியில் நேபாளம்   அமைந்துள்ளது.  நேபாள நாட்டில்  பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காட்டுத்தீ பரவி வருகிறது. அதனால் நேபாளத்தின் பல்வேறு பகுதியில் காற்றில் புகை சூழ்ந்துள்ளதால் கடந்த சில நாட்களாகவே காற்று மாசுபாடுஅடைந்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் குப்பையை எரித்தல், வாகன புகை, கட்டுமானத்துறையில் பணியின் போது ஏற்படும் மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்நாட்டில் கடுமையாக காற்று மாசுபாடு அடைந்துள்ளது. அதனால் இந்த காற்று மாசுபாட் டால்  பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு போன்றோருக்கு பல்வேறு விதமான சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பலருக்கு கண் எரிச்சல், இருமல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் பள்ளி மாணவ மாணவிகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நேபாளத்தில் வரும் வெள்ளிக்கிழமை( ஏப்ரல் 2ஆம்) தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அந்நாட்டு கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அந்நாட்டு அரசு  அறிவுறுத்தியுள்ளது .மேலும் நேபாளத்தில் காற்று மாசுபாட்டால் பள்ளிகள் மூடப்படுவது இதுவே முதல்முறைஎன்று அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது .

Categories

Tech |