மோட்டார் சைக்கிளின் மீது கார்மோதிய விபத்தில் போலீஸ்காரர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள நகரம் பகுதியில் மாரிச்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சிவகிரி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மாரிச்சாமி நெல்லை பகுதிக்கு தனது பணிக்காக மோட்டார் சைக்கிளில் மேலநீதிநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது. இந்த விபத்தில் மாரிச்சாமி பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாரிச்சாமியின் குடும்பத்தினரிடம் விசாரித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற கார் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.