Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ எல்லாம் வேஸ்டா போயிட்டே!… காதல் திருமணம் செய்த ஜோடிக்கு!…. போலீஸ் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி…..!!!!

கர்நாடகா பெங்களூருவிலுள்ள நீலச்சந்திரா பகுதியில் இளைஞர் ஒருவர் கால்டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சென்ற சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த நவம்பர் 4ம் தேதி திருவள்ளூர் பகுதிக்கு ஓடிவந்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் இளம் பெண்ணை காணவில்லை என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் கடந்த 23ம் தேதி கண்டுபிடித்தனர். அதன்பின் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, நாங்கள் இருவரும் மேஜர் என்பதால் சட்டப்படி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்து உள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களது ஆவணங்களை வாங்கி சோதித்தனர்.

அப்போது இளம் பெண்ணுக்கு 18 வயது நிறைவடைந்த நிலையில், இளைஞருக்கு 21 வயது முடியவில்லை என தெரியவந்தது. இதனிடையில் ஆணின் திருமண வயது 21 ஆக இருக்கும் நிலையில், இளைஞருக்கு 20 வயது மட்டுமே ஆனதால் இத்திருமணம் சட்டப்படி செல்லாது என காவல்துறையினர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் திருமணத்தை நடத்தி வைத்த இளைஞரின் சகோதரி மற்றும் அவரது தோழியை குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.

Categories

Tech |