Categories
தேசிய செய்திகள்

“காதல் திருமணம் செய்த சகோதரி”…. தலையுடன் செல்பி எடுத்த சிறுவனின் வெறிச்செயல்…. பயங்கரம்….!!!

காதலித்து திருமணம் செய்துகொண்ட சகோதரியை சிறுவன் தலை துண்டித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில் காதலித்து திருமணம் செய்த தனது சகோதரியை அவரது 17 வயது சகோதரன் தலை துண்டித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த செல்போனை கைப்பற்றி செல்பி நீக்கியதோடு, அதை தடவியல் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதுமட்டுமின்றி சிறுவனையும், அவரது தாயையும் காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது “அந்த சிறுவன் மராத்தி திரைப்படம் ஒன்றால் ஈர்க்கப்பட்டு இப்படி ஒரு கொலையை செய்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு நிமித் கோயல் தெரிவித்துள்ளார். இதில் கொலை செய்யப்பட்ட பெண் கடந்த ஜூன் மாதம் வீட்டைவிட்டு ஓடி தனது காதலனான வாலிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தன்னுடைய கணவருடன் லட்கான் கிராமத்தில் இருவரும் வசித்து வந்துள்ளனர்.

இவர்களுடைய திருமணம் கலப்பு திருமணம் இல்லை என்றாலும் கூட தன்னுடைய குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை கொலை செய்ய அந்த பெண்ணின் தாயும், சகோதரனும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தாயும், மகனும் சேர்ந்து சமரசம் ஏற்பட்டதாக நாடகமாடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் டீ போடுவதற்காக அந்த பெண் சமயலறைக்கு சென்றார். இந்த நிலையில் பின்புறாக சென்ற சிறுவன் சகோதரி என்று பாராது அவரை அரிவாளால் வெட்டி தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளார். அதன்பின் தாயும், மகனுமாக சேர்ந்து துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்பி எடுத்துள்ளனர். மேலும் சகோதரியின் கணவரையும் சிறுவன் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில் கொலை செய்யப்பட்ட பெண் கர்ப்பமாக இருந்தார்” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |