காதலி தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பற்றி தெரிந்து கொள்வதற்காக காதலன் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பலர் வீடியோக்களை பதிவு செய்யகின்றனர். அதில் பலர் பாராட்டுகளையும் சிலர் சர்ச்சைகளிலும் இடம் பெறுகின்றனர். அதே மாதிரியான ஒரு நிகழ்வானது ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது. ரஷ்ய நாட்டில் மாஸ்கோவைச் சேர்ந்த ஒருவர் தனது காதலி தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தெரிந்து கொள்வதற்காக இந்தச் செயலை செய்துள்ளார். அதில் அவர் தனது காரின் மேல் தனது காதலியை படுக்க வைத்து இரு கைகளையும் காருடன் சேர்த்து கட்டி வைத்துள்ளார்.
இதனை அடுத்து அவர் காரை வேகமாக இயக்கியுள்ளார். இந்த வீடியோவானது ‘trust test’ என்னும் பெயரில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதனால் காவல்துறை அதிகாரிகளும் அவரின் பக்கம் திரும்பியுள்ளனர். இந்த சம்பவத்தினால் சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக அவருக்கு 750 ருபெல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலானது வளரும் இளம் பருவத்தினருக்கு தவறான முன்மாதிரியாக அமைந்துள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.