Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ முக்கிய அப்டேட்… காதலர் தினத்தில் வெளியீடு…!!!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்டை காதலர் தினத்தில் வெளியிட உள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தை விக்னேஷ் சிவன் – நயன்தாராவின்  ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது . இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ,நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர் . மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .

இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் முக்கிய அப்டேட்டை வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியிட இருப்பதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார் . அது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |