கடந்த 1972 ஆம் ஆண்டு வியட்நாமில் நடந்த பயங்கர போருக்கு பயந்து காட்டிற்குள் சென்ற நபர் சுமார் 41 ஆண்டுகளை அங்கேயே கழித்துள்ளார்.
வியட்நாமில் கடந்த 1972 ஆம் ஆண்டு மிகவும் பயங்கரமான போர் நடைபெற்றுள்ளது. இந்தப் போரில் Ho van lang என்பவர் தன்னுடைய தாய் மற்றும் இரு சகோதரர்களை இழந்துள்ளார். அதன்பின் ho van மற்றும் அவருடைய தந்தை, அவருடைய சகோதரர் என மூன்று பேரும் Tay tra என்னும் மாவட்டத்தில் அமைந்திருக்கும் காட்டுப்பகுதிக்குள் ஓடி ஒளிந்து அங்கேயே வாழ தொடங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் புகைப்பட கலைஞரான Alvaro கடந்த 2015ஆம் ஆண்டு காட்டுப்பகுதிக்குள் வாழும் ho van னின் குடும்பத்தினரை பார்த்துள்ளார். அதன்பின் அவர்களிடம் பேசி Ho van னின் குடும்பத்தை அருகிலிருக்கும் கிராமத்திற்கு அழைத்து வந்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு கற்றுக் கொடுத்துள்ளார். இதனையடுத்து Ho van கிராமத்திற்குள் வருவதற்கு முன்பாக, இந்த பூமியில் பெண் என்ற இனமே இருப்பது தங்களுடைய குடும்பத்திற்கு தெரியாது என்றுள்ளார்.