பாகிஸ்தானிலுள்ள லாகூர் நகரில் கடந்த 3 நாட்களாக காற்றின் தரக் குறியீடு எண் 500க்கும் மேல் இருந்து வந்ததையடுத்து தற்போது அதன் குறியீட்டு எண் 700 ஐ தாண்டியுள்ளது.
பாகிஸ்தானில் லாகூர் என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் கடந்த 3 நாட்களாகவே காற்றில் கலந்துள்ள மாசு தொடர்பான தரத்தை குறிக்கும் பதிவேட்டில் 500க்கும் மேல் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது காற்றில் கலந்துள்ள மாசு தொடர்பான தரத்தைக் குறிக்கும் பதிவேட்டில் 700 ஐ தாண்டி குறியீட்டு எண் பதிவாகியுள்ளது. இதனால் உலகிலேயே மிகவும் மோசமான காற்று மாசுபாடு பாகிஸ்தானிலுள்ள லாகூர் நகரத்தில் தான் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதையடுத்து நீதிபதி காற்று மாசு தொடர்பான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் தற்போது வரை எடுக்காதது தனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.