Categories
சினிமா தமிழ் சினிமா

‘காற்று போன பலூன் மாதிரி இருக்கீங்க’ … சோகமா இருக்கும் போட்டியாளர்களை சிரிக்க வைத்த கமல்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாளை இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ? என்பது தெரிந்துவிடும் . இன்று வெளியான முதல் புரோமோவில் இன்னும் ஒரு திருப்பம் பாக்கி இருப்பதாக கமல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோவில் கமல் இறுதிப் போட்டியாளர்களிடம் ‘உங்கள் நண்பர்களின் வருகை எப்படி இருந்தது?’ என கேட்கிறார். இதற்கு பதிலளித்த ரம்யா ‘அவர்கள் வெளியில் நடந்த விஷயத்தை சொன்னதால் ஆப்செட் ஆனேன்’ என்கிறார்.

இதன் பின் பேசிய ரியோ ‘எங்களைப் பற்றி கூறியது கஷ்டமாக இருந்தது’ என்கிறார். அப்போது பேசிய கமல் ‘எனக்கு உங்கள் முகத்தை பார்க்கவே பிடிக்கல. காற்று போன பலூன் மாதிரி இருக்கீங்க. நிச்சயம் நீங்க வெளியே வந்தால் உங்கள் முகம் மலரும் . தேவையில்லாமல் கவலையுடன் இருந்தோமே என்று நீங்கள் நினைக்க தான் போகிறீர்கள்’ என்று கூறுகிறார். இதனால் சற்று நிம்மதியும் , சிரிப்பும் போட்டியாளர்கள் முகத்தில் மலர்கிறது .

Categories

Tech |