Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டியை பாதுகாப்பாக அழைத்து சென்ற யானைகள்….. வைரலாகும் புகைப்படம்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

பிறந்து சில வாரங்களே ஆன குட்டியை தாய் உட்பட 2 காட்டு யானைகள் பாதுகாப்பாக அழைத்து சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்தது. அப்போது பிறந்து சில வாரங்களே ஆன குட்டியை தாய் உள்பட 2 யானைகள் பாதுகாப்பாக அழைத்து சென்றதை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதனை சிலர் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, குறிப்பிட்ட வயதுவரை குட்டியை காட்டு யானைகள் மிகவும் பாதுகாப்பாக பராமரித்து வரும். சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் அதனை கண்டு ரசிக்க வேண்டும். இந்த காட்டு யானைகள் தாக்குதலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |