பருவநிலை மாற்றத்தில் காட்டுப்பன்றிகளால் பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
நமது பூமியின் ஒவ்வொரு கண்டத்திலும் வாழும் ஒரு தனித்துவமான விலங்கு காட்டுப்பன்றி ஆகும். இது பாலூட்டி வகையைச் சார்ந்தது. இந்த காட்டுப்பன்றிகளை பற்றி கடந்த வாரம் Global Change Biology நிறுவனம் நடத்திய ஆய்வு குறித்து வெளியிட்டுள்ளது. அதில் குயின்ஸ்லாந்து, கேன்டர்பரி, மெனோவா மற்றும் ஹவாய் போன்ற 8 பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் பங்கேற்று ஒரு குழுவாக செயல்பட்டு ஆராய்ச்சி செய்துள்ளனர். இந்த ஆய்வில் காட்டுப்பன்றிகள் தைவானின் நிலப்பரப்புக்கு இணையான பரப்பளவில் மண்ணை தோண்டியுள்ளதாக கண்டறிந்துள்ளனர். இதனால் ஆண்டுக்கு 4.9 மில்லியன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. இந்த கார்பன் வெளியீட்டின் அளவானது ஒரு மில்லியன் கார்களின் கார்பன் உமிழ்வுக்கு நிகராகுமாம்.
இந்த ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் உலகளவில் இதன் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிய தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, ஓசியானா, அமெரிக்கா போன்ற நாடுகளில் 10,000 காட்டுப்பன்றி மாதிரிகளை வைத்து ஆராய்ச்சி செய்துள்ளனர். இந்த ஆய்வில் காட்டுப்பன்றி மாதிரிகள் தோண்டப்படும் மண்ணின் அளவைக் கணக்கிட்டு எவ்வளவு தோண்டுகின்றன என்று முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து உள்ளூரில் ஆய்வுகள் மேற்கொண்டதில் காட்டுப்பன்றிகளால் குறைந்த பட்சம் மற்றும் அதிக பட்சமாக எவ்வளவு மண் தோண்டப்படும் என்பதையும் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் உலகளவில் ஒரு ஆண்டுக்கு பாதிக்கப்படும் மண்ணின் அளவானது 36,714 முதல் 123,517 சதுர அடி வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது தைவான் மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நிலப்பரப்பை குறிக்கிறது. மேலும் மண்ணுக்கு அடியில் உள்ள கார்பனானது பூமியின் மேற்புறத்தில் லேசாக கசிந்தாலும் பருவநிலையில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும். அதிலும் ஓசியானா பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகளால்அதிக அளவு மண் தோண்டப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி மண்ணுக்கு அடியில் அதிக அளவு கார்பன் இருந்தாலும் காட்டு பன்றிகள் வெளியேற்றும் உமிழ்வின் அளவு அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கையை குறைக்காவிட்டால் பருவநிலை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.