சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் 7 வயது சிறுமி வசித்து வருகின்றார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் அருகிலுள்ள காட்டுக்கு அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவனை கைது செய்தனர்.