காட்டுப் பன்றி கடித்து குதறியதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏப்பாக்கம் பகுதியில் செல்வராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் சவுக்கு மர தோப்பிற்கு ஆடுகளுக்கு தழை பறிப்பதற்காக செல்வராஜ் சென்றுள்ளார். இதனையடுத்து காப்பு காட்டுக்குள் இருந்து வந்த காட்டுப்பன்றி செல்வராஜை துரத்தி சென்றுள்ளது.
அதன் பின் காட்டுப்பன்றி செல்வராஜை கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.