Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல என்ன செய்ய…? எல்லை மீறும் அட்டகாசம்… அச்சத்தில் கிராம மக்கள்…!!

காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உடையார்கோணம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த காட்டு யானைகள் அப்பகுதியில் இருக்கும் தென்னை, வாழை போன்ற  மரங்களை முறித்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்பகுதி மக்கள் பெரிய அளவிலான அகழிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி உள்ளனர். ஆனாலும் அதனை மீறி வேறு வழியாக காட்டுயானைகள் ஊருக்குள் நுழைகிறது.

இந்நிலையில் செல்வன் என்பவரது தோப்புக்குள் புகுந்த காட்டுயானைகள் நீண்ட நாட்களாக பாதுகாத்து வந்த மரங்களை நாசம் செய்தது. இது குறித்து அறிந்த அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக யானையை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக அகழிகள் தோண்டப்பட்ட போதிலும் காட்டு யானைகள் மீண்டும் வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே ஊருக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |