Categories
தேனி மாவட்ட செய்திகள்

யானையின் அட்டகாசம்…. வெளியே வந்த தொழிலாளி…. நேர்ந்த சோக முடிவு…!!

மேகமலை பகுதியில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் பகுதியில் மேகமலை வன உயிரின சரணாலயம் பகுதிக்குட்பட்ட  மலை கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களில்  பெரும்பாலான மக்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி மணலாறு பகுதியில் விறகு சேகரிக்க சென்ற முதியவரை காட்டு யானை தாக்கியதில் அவர்  உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் மேல்மணலாறு பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்குள் நேற்று இரவு காட்டு யானை புகுந்து அங்குள்ள வீடுகளை  சேதப்படுத்தியது . இதனால் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த 52 வயதுடைய முத்தையா என்பவரை காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம்  குறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும் , வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  அப்பகுதியை ஆய்வு செய்தனர். பின்னர் முத்தையாவின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வனத் துறையினரிடம் தகுந்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Categories

Tech |