கடன் தொல்லை அதிகரித்ததால் காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள யாக்கோபுரம் பகுதியில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிள்ளையார் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசனுக்கு கடன் அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது குமரேசன் திடீரென காற்றாலை நிறுவனத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த சக ஊழியர்கள் இது குறித்து பழவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குமரேசனின் சடலத்தை கைப்பற்றி நாகர்கோவில் ஆச்சாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.