மதுபான கடை மேற்பார்வையாளர் உட்பட 8 பேர் பணம் பதுக்கிய குற்றத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் செல்லும் சாலையில் மதுபான கடை ஒன்று உள்ளது. அங்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கணக்கில் காட்டப்படாத பணம் 28 ஆயிரத்து 280 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த மதுபான கடையில் பணியாற்றிய மேற்பார்வையாளர்களான மந்திரவேல், லட்சுமணன், மகேந்திரன் விற்பனையாளர்களான சிவகுமார், அற்புதராஜ், முருகன் மற்றும் உதவி விற்பனையாளர்கள் சுப்பையா, சுதாகர் சாமுவேல் ஆகிய 8 பேரையும் மாவட்ட மதுபான கடை மேலாளரான அய்யப்பன் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.