ரவுடியை காவல்துறையினர் பிடிக்கும் போது தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் ஆள் கடத்தல், திருட்டு, வழிப்பறி போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால் இவரின் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் இவரின் பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதால் காவல்துறையினர் ராமமூர்த்தியை வலைவீசி தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் ராமமூர்த்தி அவரின் வீட்டில் இருக்கின்றார் என்று காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் ராமமூர்த்தியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ராமமூர்த்தி காவல்துறையினரை பார்த்ததும் திடீரென அங்கிருந்து பிளேடை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ராமமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனைப் போலவே கடந்த ஆண்டு ராமமூர்த்தியை காவல்துறையினர் பிடிக்கச் செல்லும்போது அவர் கத்தி எடுத்து விரலை அறுத்து கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார் . எனவே காவல்துறையினர் மீண்டும் ராமமூர்த்தியை பிடிக்கும் போது தற்கொலை செய்ய முயன்றதாக அவரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.