Categories
உலக செய்திகள்

பள்ளி முன்பு கிடந்த வாலிபர்….. விசாரணை மேற்கொண்ட போலீசார்…. வெளிவந்த உண்மை….!!

பள்ளியின் முன்பு காயங்களுடன் கிடந்த வாலிபரின் வழக்கில் சில உண்மைகள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் உள்ள  Münchenstein பள்ளி அருகே கடந்த மாதம் 16 வயது வாலிபர் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் மீட்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உரிய விசாரணையை மேற்கொண்டனர். இந்த நிலையில் அந்த விசாரணையில் சில உண்மைகள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அலுவலகம் கடந்த வியாழக்கிழமை அன்று அறிவிப்பாக வெளியிட்டுள்ளனர்.

அதில் “இதுவரை நடந்த தீவிர விசாரணையில், அந்த வாலிபரே தனக்கு தானே கத்தியால் குத்திக்கொண்டு இது போன்று நாடகம் நடத்தியதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்ற நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் மூடப்பட்டதாகவும்  தெரிவித்துள்ளனர். குறிப்பாக இனிமேல் விசாரணையானது அந்த வாலிபர் மீது எடுக்கப்படும் என்றும் இதன் நோக்கம் குறித்து விசாரிக்கப்படும்” எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |