Categories
உலக செய்திகள்

இதுங்க எல்லாம் ஊருக்குள்ள எப்படி வந்துச்சு…. 1 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்டம்…. ட்ரோன்களுடன் களத்திலிறங்கிய பிரபல நாட்டு அதிகாரிகள்….!!

சரணாலயத்திலிருந்து பொதுமக்கள் வாழும் இடத்திற்கு நுழைந்து 1 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்டம் ஏற்படுத்திய காட்டு யானைகளை விரட்டுவதற்காக 150 வாகனங்கள், அவசர சேவை அலுவலர்கள்,400 காவல்துறையினர் டிரோன்களுடன் களத்தில் இறங்கியுள்ளார்கள்.

சீனாவின் Xishuangbanna என்னும் இயற்கை சரணாலயத்தில் இருந்து சுமார் 15 காட்டு யானைகள் மக்கள் வாழும் yuxi என்ற நகரத்தை அடைந்துள்ளது. இதனையடுத்து சுமார் 6 மணிநேரம் அந்த 15 காட்டு யானைகளும் அந்த பகுதியிலிருக்கும் வீடுகளை நாசம் செய்வது, குப்பைத் தொட்டிகளை உடைப்பது போன்ற அட்டகாச செயல்களில் ஈடுபட்டுள்ளது.

மேலும் 60 ஹெக்டர் பயிர்களை நாசம் செய்து விட்டு அப்பகுதியிலிருந்த தண்ணீர் குழாயை சாதுரியமாக திறந்து அனைத்து யானைகளும் தண்ணீர் குடித்துள்ளது. இதனையடுத்து 1 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்டத்தை ஏற்படுத்திய காட்டு யானைகள் 8 மில்லியன் பொதுமக்கள் வாழும் kunming என்னும் மாகாணம் நோக்கி சென்றதால், அதனை வனப்பகுதிக்கு விரட்டுவதற்காக 400 காவல்துறையினர்கள், 120 வாகனங்கள், அவசர சேவை அலுவலர்கள் என அனைவரும் டிரோன்களுடன் களத்தில் இறங்கியுள்ளனர்.

இவர்கள் யானைகளுக்கு அன்னாசி பழங்கள், 18 டன் மக்காச்சோளம் போன்றவற்றை சாப்பிடுவதற்காக கொடுத்துவிட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கு முயற்சி செய்கின்றனர். இந்நிலையில் காட்டு யானைகள் 300 மைல் தூரம் கடந்து ஊருக்குள் எப்படி வந்தது என்ற சரியான கருத்தை எவராலும் கூறமுடியவில்லை.

Categories

Tech |