ராணிப்பேட்டையில் கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் 5 நபர்கள் கொண்ட குழுவினர் கொரோனா குறித்த அறிகுறிகள் இருக்கிறதா என்று வீட்டிற்கே சென்று விவரங்களை சேகரித்துள்ளனர். அப்பணியினை ராணிப்பேட்டையினுடைய உதவி இயக்குனரான ஆனந்தன் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பொதுமக்கள் எவருக்காவது கொரோனா குறித்த அறிகுறிகள் இருந்தால் உடனே மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுரைகளையும் கூறினார். அதன்பின் அவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.