Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்கூட யாருமே இல்லை…. கேபிள் டி.வி. ஆபரேட்டரின் விபரீத முடிவு…. ராணிப்பேட்டையில் சோகம்….!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் செல்வ விநாயகர் கோவில் தெருவில் கருணாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக இருந்துள்ளார். இவரது சுதா என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு காரணமாக சுதா தனது குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

எனவே வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாத காரணத்தினால் மனமுடைந்த கருணாநிதி கடந்த 5-ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக கருணாநிதியை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கருணாநிதி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Categories

Tech |