காபூல் பலக்லைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி அதிகாரம் தலிபான்களின் கைவசம் சென்றுள்ளது. மேலும் அந்நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் போதிய உணவு, மருந்து, குடிநீர் போன்ற அத்தியாவசியத் பொருட்கள் கிடைக்காததால் ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருகிறார்கள் என யுனிசெஃப் அமைப்பு மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் காபுல் நகரில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் முகமது உஸ்மான் பாபுரி என்பவர் பி.எச்.டி பட்டப்படிப்பை முடித்து துணைவேந்தராக பணியாற்றி வந்தார்.
இதனை தொடர்ந்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் துணைவேந்தரான முகமது உஸ்மான் பாபுரியை பணியில் இருந்து நீக்கினார்கள். அதன் பின் அந்த பணிக்கு முகமது அஷ்ரஃப் கைராத் என்பவரை நியமித்து உள்ளனர். இதனை எதிர்க்கும் வகையில் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. மேலும் கடந்த வருடம் நடந்த பத்திரிக்கையாளர் கொலையை கூட நியாயம் என கூறி முகமது அஷ்ரஃப் கைராத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தலிபான்களின் உறுப்பினர்கள் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் காபூல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த மொத்தம் 70 பேராசிரியர்கள் தங்களது பணியிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர்.