விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலிபான்களின் கையில் சிக்கியுள்ளது. மேலும் அவர்கள் ஆப்கானில் புதிய ஆட்சி அமைக்கப்போவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் மக்கள் காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று குண்டு வெடிப்பு நிகழ்வு நடந்துள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பானது விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 2 பேர் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தலீபான்களின் அதிகாரி ஒருவர் கூறியதாவது “குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தலீபான் காவலர்கள் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் நான்கு அமெரிக்கா ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனை அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் இந்த குண்டு வெடிப்பில் சிக்கியவர்கள் தங்களது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.