விமான நிலையத்தில் 7 மாத குழந்தை ஒன்று பரிதாபமாக பிளாஸ்டிக் பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலீபான்கள் கைப்பற்றியதால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் வசம் சென்று உள்ளது. இதனால் மக்கள் ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர் விமானம் மூலம் மற்ற நாடுகளுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் ஏழு மாத குழந்தை ஒன்று அழுத நிலையில் மீட்கப்பட்டுள்ளது
இது குறித்து காபூல் ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “விமான நிலையத்தினுள் பிளாஸ்டிக் பெட்டியில் கிடந்த ஏழுமாத குழந்தையின் பெற்றோர் காபுப் பிடி- 5 என்ற பகுதியில் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்களை கண்டு பிடிக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.