Categories
உலக செய்திகள்

வெளியேறும் ராணுவ படையினர்…. விருப்பம் தெரிவித்த தலீபான்கள்…. ஆலோசனையில் அமெரிக்கா அதிகாரிகள்….!!

அமெரிக்கா படையினர் வெளியேறினாலும் அவர்களின் தூதரக அதிகாரிகளில் ஒருவரையாவது விட்டுச் செல்லுமாறு தலீபான்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். மேலும் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று ஆப்கானை தலீபான்கள் கைப்பற்றிய பிறகு அமெரிக்கா தூதரக அதிகாரிகள் காபூலில் உள்ள அமெரிக்கா விமானப்படை தளத்திற்கு பாதுகாப்பாக தப்பிச் சென்றனர்.

மேலும் அதிபர் ஜோ பைடன் உத்தரவின் படி வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று அமெரிக்கா ராணுவ படைகள் ஆப்கானை விட்டு வெளியேறுகின்றனர். இதனையடுத்து காபூலில் அமெரிக்கா தூதரக அதிகாரிகளை வைத்து இருந்தாலும் அவர்களை பாதுகாக்க ராணுவ வீரர்கள் அங்கு இருக்க மாட்டார்கள். அதிலும் தலீபான்களால் நடத்தப்படும் அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரிக்காத நிலையில் அங்கு அமெரிக்கா தூதரக அதிகாரிகள் இருப்பது சற்று சந்தேகமே.

இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்கா தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு உறுதி அளிக்க, மீட்பு நடவடிக்கைகள் முடிவதற்கு முன்னரே அடுத்த வாரத்தில் இது குறித்து தீர்வு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக  அமெரிக்கா படையினர் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியேறினாலும் அதன் பிறகும் அவர்களின் தூதரக அதிகாரிகளில் ஒருவரையாவது விட்டு செல்லுமாறு தலீபான்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Categories

Tech |