காபூலில் இருக்கும் துணை மின் நிலையம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள Khair Khāna மாவட்டத்தில் ராக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலானது Chamtalah துணை மின் நிலையத்தை தாக்கி இருக்கக்கூடும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த ராக்கெட் தாக்குதலினால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ராக்கெட் தாக்குதலில் சேதமடைந்த வீடுகள் குறித்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அதிலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குறிப்பாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியதை அடுத்து பல்வேறு மாகாணங்களை தலீபான்கள் கைப்பற்றினர்.
மேலும் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நாள் முதல் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஒரு பகுதியான கோரோசன் பிரிவினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.