தலீபான்கள் அமைக்க போகும் புதிய ஆட்சி குறித்து ஆலோசனை நடத்த பாகிஸ்தான் உளவுத்துறை காபூலுக்கு சென்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியை அமைக்கும் செயலில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐயின் இயக்குனர் ஃபைஸ் ஹமீது அவரது குழுவுடன் காபூலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது குழு ஆப்கானிஸ்தானில் தலீபான்களுடன் புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக காபூலுக்கு வந்துள்ளனர்.
மேலும் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் நிதி விவகாரங்களை பற்றி தலீபான்களுடன் அந்த குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் முக்கியமாக ஆப்கானில் புதிய ஆட்சியில் அவர்களின் ஆதரவு பெற்ற ஹக்கானி அமைப்புக்கு அதிக பலம் தருவதற்காக காபூலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.