உலக நாடுகள் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதால் எரிபொருளின் தேவை அதிகரித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று பாதிப்பானது தற்பொழுது தான் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுகளை தளர்த்தி வருகின்றனர். மேலும் தங்களது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான முயற்சியை தொடங்கியுள்ளனர். இதனால் எரிபொருளின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் இந்த எண்ணெயின் ஒரு பீப்பாய் விலையானது கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 80 டாலரை எட்டியுள்ளது. குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாம். மேலும் தேவைக்கு ஏற்ப எண்ணெயின் உற்பத்தியை அதிகரிக்க செய்யாததே விலை உயர்வுக்கு காரணம் என்று கூறுகின்றனர். இந்த விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிப்பொருள்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
அதிலும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 19 காசுகள் உயர்ந்துள்ளது. அதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 15 காசுகளுக்கு விற்பனையாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு லிட்டர் டீசலும் 24 காசுகள் அதிகரித்து 94 ரூபாய் 71 காசுக்கு விற்பனையாகியுள்ளது. மேலும் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கவுள்ளதால் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.