கடக ராசி அன்பர்கள், இன்று தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் அனைத்துமே பூர்த்தியாகும். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் மட்டும் இருக்கட்டும்.
ஒருமுறைக்கு, இருமுறை தொழில் சார்ந்த வகையில் முடிவு எடுப்பதற்கு முன் யோசியுங்கள். பெரியோரிடம் ஆலோசனை கேளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்பு இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. இன்றைக்கு மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள், உழைத்து பாடங்களை படியுங்கள், படித்த பாடத்தை எழுதி பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள்