Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…மனக்கசப்பு ஏற்படும்…சாமர்த்தியமாக செயல்படுவீர்கள்…!

 

கடகம் ராசி அன்பர்களே …!    இன்று குடும்ப தேவைகளில் கவனம் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட தன்மை இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவு உண்பதில் ரொம்ப முக்கியமான கட்டுப்பாடு வேண்டும். பணியாளர்கள் இனிய அணுகுமுறையால் நன்மை பெறக்கூடும். வருமானமும் ஓரளவுக்கு நல்ல படியாக இருக்கும்.

இன்று சிலர் உங்களை மனம் நோகும்படி செய்வார்கள். திடீர் கோபம் ஏற்படலாம்.  மற்றவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். குடும்ப விவகாரங்களில் தலையிடும் போது ரொம்ப சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் இருக்கும்.

பிள்ளைகளிடம் கோபத்தை தயவு செய்து காட்ட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமா திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |