கடக ராசி அன்பர்களே …! இன்று சுப செலவுகள் ஏற்படும் நாளாக இருக்கும். பயணங்களால் நல்ல பலன் உண்டாகும். நண்பர்களின் உதவிகள் கிட்டும். குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். தொழிலில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம் அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் கொஞ்சம் நடக்கலாம். மனம் தராமல் இருப்பது நல்லது. இன்று வீண் ஆசைகள் தோன்றும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் இருக்கட்டும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனகசப்பு மாறும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருக்கும். கூடுமானவரை சரியான உணவை எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்திலும் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.
புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். காதல் கைக்கூடி வெற்றி பெறும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.