கடக ராசி அன்பர்களே …! இன்று தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய ஆடர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள் வீணாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க வேண்டியிருக்கும். சம்பளம் வருவதற்கு தாமதப்பட்டு தான் வந்து சேரும். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் வேண்டும். வழக்கு ஏதேனும் இருப்பின் அது உங்களுக்கு ஓரளவு சாதகமான பலனையே கொடுக்கும்.
வீண் அலைச்சல் காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகள் தள்ளிப் போடுவது ரொம்ப நல்லது. காரியம் நடப்பதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை இன்று கவர்வீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை ஏற்படும். பணவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் சரியாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூல் செய்வது மட்டும் கோபம் ஏதும் காட்ட வேண்டாம்.
நீண்ட நாட்களாக இருந்த கஷ்டங்கள் ஓரளவு படிப்படியாக குறைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கும். எதையும் திறமையுடன் செய்து முடிப்பீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.