கடக ராசி அன்பர்களே …! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். ஆரோக்கியம் சீராகும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலைகள் நீங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
எடுத்த காரியத்தை முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று நாள் ஓரளவு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இறை வழிபாட்டுடன் காரியங்களை செய்யுங்கள் அது போதும். இன்று காதலர்கள் பொறுமை காக்க வேண்டும்.
நிதானமாக செயல்பட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.