Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…தெளிவு பிறக்கும்…உற்சாகம் கூடும்…!

கடக ராசி அன்பர்களே …!     தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாளாக இருக்கும், உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பண கஷ்டம் குறையும். பண வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனாலும் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கை ஈடுபடுவது நல்லது.

உடல் ஆரோக்கியம் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகமான பலனை உண்டாகும். இன்று உயர் அதிகாரிகளால் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அவரிடம் மட்டும் எந்தவித வாக்குவாதத்தில் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். பெரியவர்களின் ஆசியும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். புதிதாக காதலில் வயப்படக் கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை இருப்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிஷ்ட  நிறம்: இளம்மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |