Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…விழிப்புணர்ச்சி தேவை…அலைச்சல் அதிகரிக்கும்…!

கடக ராசி அன்பர்களே …!     விரயங்கள் கூடும் நாளாக இருக்கும். விழிப்புணர்ச்சி அதிகமாக தேவைப்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்சம் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். உள்ளத்தில் அமைதி கூட உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு இடமாற்றம் போன்றவை மகிழ்ச்சியை கொடுக்கும்.

புதிதாக வீடு கட்டக்கூடிய எண்ணங்கள் நிறைவேறும். இன்று அனைத்து விஷங்களையும் மிக சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள், அதனால் பாராட்டுகளையும் பெறுவீர்கள். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு புதிய பதவிகள் தேடிவரும். அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உதவிகள் செய்யும் போது கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.

புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சித்தர்கள்  வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |